அதிமுக அரசின் அரசாணை! புதிய சட்டம் கொண்டு வாங்க - சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Chennai HC order to TNGovt Koyambedu Govt Land case
கோயம்பேடு அருகே "பாஷ்யம் கான்ஸ்ட்ரக்சன்" நிறுவனத்திற்கு தாரைவாக்கப்பட்ட 10.5 ஏக்கர் அரசு நிலத்தை மீண்டும் அரசு கையகப்படுத்தியது சரிதான் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான 10.15 நிலத்தை பாஷ்யம் நிறுவனத்திற்கு சதுர அடிக்கு ரூபாய் 13 ஆயிரத்து 500 என்ற குறைந்த விலைக்கு, கடந்த அதிமுக அரசு 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து அரசாணை பிறப்பித்தது.
பின்னர் திமுக ஆட்சி மாறிய பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நில விற்பனையை ரத்து செய்து திருத்திய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திறந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அரசு நிலத்தை முழுமையாக மீட்டு வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோத நில ஒதுக்கீடு, குத்தகை பாக்கி வசூலிப்பது பற்றி ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும், தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HC order to TNGovt Koyambedu Govt Land case