நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்படும் - சென்னை ஐகோர்ட் உத்தரவு.!
chennai high court order full checkup to peoples
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:- நீதிமன்றத்தின் கட்டிடத்திற்கு தரும் பாதுகாப்பை போலவே உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி காவல்துறையின் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.
English Summary
chennai high court order full checkup to peoples