பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மனுவை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!!
chennai high court order no cancelled salem periyar university vice chancellor case
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆர். ஜெகநாதன் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் படி போலீசார் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பண பரிவர்த்தனையோ, முறைகேடோ நடைபெறவில்லை என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது. அதன் படி நீதிபதியும் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English Summary
chennai high court order no cancelled salem periyar university vice chancellor case