திமுக தலைவராகவே களமிறங்கிய CM ஸ்டாலின்! அடுத்தடுத்த அதிரடி!
DMK Ponmudi Trichy Siva MK STalin
திமுக அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் மிக கேவலமாக பேசியது கடுமையான சர்ச்சையை கிளப்பியதோடு, பலத்த எதிர்ப்புகளையும் பெற்று வருகின்றன.
பொன்முடியின் இந்த பேச்சுக்கு திமுக துணை பொதுச்செயலாளர், எம்.பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக தலைமையகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவை திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பொன்முடி பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய இடத்தை மாற்றாக நிரப்பும் வகையில் திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த திருச்சி சிவா, தற்போது கட்சியின் புதிய துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று ஸ்டாலினே நேரடியாக அறிவித்துள்ளார்.
English Summary
DMK Ponmudi Trichy Siva MK STalin