தமிழகத்தில் 17-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு! அதிகபட்ச வெப்பநிலை பதிவாகவும் வாய்ப்பு!
TN Rain IMD weather report
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்தியமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை அதே பகுதியில் மறைந்துவிட்டது. இருந்தாலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அப்பகுதியில் தொடர்ந்தும் நிலவி வருகிறது.
இதன் தாக்கமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை இவ்வாறே மழை வாய்ப்பு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
தமிழகத்தில் இன்று முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
15-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டமாக இருக்கலாம். சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சம் 37-38°C, குறைந்தபட்சம் 27-28°C இருக்க வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கிமீ வேகத்துடன், இடைவேளையில் 55 கிமீ வரை வீசக்கூடும். எனவே, கடலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
TN Rain IMD weather report