அமைச்சரவையிலிருந்து பொன்முடி நீக்கம்? அமைச்சர் ரகுபதி பேட்டி! சென்னை விரைந்த பொன்முடி!
Minister Regupathy ponmudi DMK MK Stalin
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசி இருந்தார்.
இதற்க்கு பாஜக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்லாமல், திமுக எம்பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பொன்முடியின் துணைப்பொதுச்செயலாளர் பறிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசும் போது தவறுதலாக இப்படி பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வக்காலத்து வாங்கி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டார்கள். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். அவர் சீனியர் அமைச்சர். அவர் குறித்து கருத்து சொல்லும் உரிமை எனக்கு இல்லை. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
இதற்கிடையே, விழுப்புரத்திலிருந்து அமைச்சர் பொன்முடி சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
English Summary
Minister Regupathy ponmudi DMK MK Stalin