சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!
chennai high court order not allowed vel protest in chennai
சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என்று மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்தார். அதாவது, வேல் ஏந்தி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு அளித்தார்.
English Summary
chennai high court order not allowed vel protest in chennai