டாஸ்மாக் விவகாரம் - வரும் 25 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்.!!
chennai high court order to enforcement department no action in tasmac issue
சமீபத்தில் அமலாக்கத்துறை தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என்று, 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி அதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை வெளியிட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது.
-lv5ph.jpg)
அப்போது, டாஸ்மாக் தரப்பில் "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கி உள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டத்ற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில், "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் துன்புறுத்தவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்?. அமலாக்கத்துறைகு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வருகின்ற 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்து, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
English Summary
chennai high court order to enforcement department no action in tasmac issue