புற்றுநோய் வரைபடம் - சென்னை ஐ.ஐ.டி சாதனை.!
chennai iit published cancer image
மனிதர்களுக்கு ஏற்படும் உடல் நோய்களில் மிக ஆபத்தான ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் இந்த பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகளவில் மரபணு ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.
நம் நாட்டில் புற்றுநோய்க்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிவதற்கான சாதனங்கள் மற்றும் மருந்துகளை பட்டியலிடப்படவில்லை. இந்த இடைவெளியை போக்கும் விதமாக, புற்றுநோய் மரபணு திட்டத்தை சென்னை ஐஐடி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார் பக புற்றுநோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய மார்பக புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் சுருக்கமும் சேகரிக்கப்பட்டது" இந்த வரைபடத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நேற்று வெளியிட்டார்.
இந்த வரைபடங்களை bcga.iitm.ac.in என்ற தளத்தில் பார்க்கலாம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இந்த தளத்தை எளிதில் பயன்படுத்தலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai iit published cancer image