பெரும் அதிர்ச்சி: சென்னையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு!
Chennai Illicit Foreign Liquor Seized
தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுபடுத்த தமிழ்நாடு அமலாக்கப்பணியகம் குற்றப்புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறது.
இந்த நிலையில் இரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய புலனாய்வு பிரிவு சென்னை மண்டல காவல் ஆய்வாளர் தலைமையில குழுவினர் ஒரு மூன்று சக்கர வாகனத்தை நெல்சன்மாணிக்கம் சாலையில் மடக்கி சோதனை செய்ததில் 50 போலி அயல்நாட்டு மதுபானம் பாட்டில்கள் ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் மற்றும் அதில் பயணித்து வந்தமுகமது நசீம்தீன், ராவூத்தர் நைனார் முகமது, சையது அப்துல் காதர் ஆகியோரை விசாரணை செய்ததில், போலி அயல் நாட்டு மதுபானம் பாட்டில்களை கோபி, சென்னை என்பவரிடத்தில் வாங்கி, அதிக விலை வைத்து விற்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபி என்பவரின் வீட்டிற்கு சென்று பார்த்ததில், கோபி என்பவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்ததில் போலி மதுபானம் - 210 லிட்டர், பாண்டிச்சேரி மாநில மதுபானம் 220 லிட்டர், ஹரியானா மாநில மதுபானம் - 19 லிட்டர். 5000 காலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டண மில்லா சேவை எண்.10581 அல்லது CUG No.9498410581 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.
English Summary
Chennai Illicit Foreign Liquor Seized