சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு., சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் இன்று விடுத்துள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

"இன்றும், நாளையும் (16, 17) தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

நாளை மறுநாள் (18.01.2022) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

வருகின்ற 19.01.2022, 20.01.2022 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) : பிலவாக்கல் (விருதுநகர்) 5 , தென்காசி (தென்காசி) 4, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), செங்கோட்டை (தென்காசி) தலா 3, ஆரணி (திருவண்ணாமலை), திருச்செந்தூர் (தூத்துக்குடி) தலா 2 , ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 1. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று அந்த அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai imd report jan 16


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->