காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதிவரை... வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
Chennai IMD report Rain Alert 18082023
தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "நாளை மற்றும் 20, 23-ந்தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ந்தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டடம் ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., மழையும், குறைந்தப்பட்சமாக திருவள்ளூர், கத்திவாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.
இதன் காரணமாக, வங்கக்கடலின் வடகிழக்கு கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai IMD report Rain Alert 18082023