சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது..!!
Chennai jewelery shop robbery case accused arrested in Bengaluru
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஜே.எல் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெல்டிங் மிஷின் ஷட்டரில் ஓட்டை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த காரின் பதிவின் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு தொட்ட புல்லாபுரா பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகியோரை பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசார் கைது செய்து சென்னை திரு.வி.க நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரான அருண் மற்றும் கௌதம் ஆகியோர் தலைவராக இருந்து வந்தனர். இவர்களை தனிப்படை போலீசார் கடந்த 4 மாதங்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கௌதமை தனி படை போலீசார் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கௌதமை சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர்.
English Summary
Chennai jewelery shop robbery case accused arrested in Bengaluru