#BREAKING: சென்னையை பதறவைத்த இளைஞர்! கதிகலங்கிய கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜா (24 வயது) இன்று தனது இரு சக்கர வாகனத்தில் கத்திபாரா மேம்பாலத்திற்கு வந்துள்ளார்.

அப்போது திடீரென தனது பைக்கை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். 

இதில், கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெருசலும் ஏற்பட்டது. 

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாமுவேல் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாமுவேல் ராஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் பிரச்சனை அல்லது காதல் தோல்வி, பெற்றோருடன் வாக்குவாதத்தில் மனமுடைந்து சாமுவேல் ராஜா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மும்பையில் மேம்பாலம் ஒன்றில் கரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதேபோல் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kathipara Bridge Young Man Suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->