#சென்னை || 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.! வெளியான அதிர்ச்சி காரணம்.!
chennai kundrathur 6th class student suicide
சென்னை : அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால், தந்தைக்கு பயந்து ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் இந்த நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. கையடக்க செல்போனில் உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்துவிடலாம் எனும் அளவிற்கு அத்தனை நுணுக்கங்களையும் இந்த ஸ்மார்ட்போன் மூலமாக நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளி படிக்கும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போன்களில் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வி பயில்வதை விட, கவனச்சிதறல் ஏற்பட்டு இணையதளத்தில் உலாவுவதும், ஆன்லைன் கேம்களில் கவனத்தை செலுத்துவதுமாகவே இருந்து வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டு தமிழகத்தின் பல்வேறு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் ஒரு செயலாகவே மாறிவிட்டது.
இந்த நிலையில், சென்னை அருகே குன்றத்தூர் பகுதியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவியின் தற்கொலைக்கு காரணமாக, அடிக்கடி அவர் செல்போன் பயன்படுத்துவதை தனது தந்தையிடம் கூறி விடுவேன் என சக தோழி கூறியதால், தந்தைக்கு பயந்து அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai kundrathur 6th class student suicide