சென்னை || வடகிழக்கு பருவமழையால் சதம் அடித்த 79 ஏரிகள்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 586 ஏரிகள், 3,296 குளங்கள்,குட்டைகள் என மொத்தம் 4,463 நீர் நிலைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியநாகப்பூண்டி, வீரமங்கலம், வெள்ளேரிதாங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 70 ஏரிகளும், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9 ஏரிகளும் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

அதேபோன்று ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 14 ஒன்றியங்களில் சுமார் 3,296 குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் 663 நீர்நிலைகள் 100% நிரம்பியுள்ளது. இதேபோன்று ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 130 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேலும், 231 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும் நீர் நிரம்பியுள்ளது.

 

முழு கொள்ளளவு எட்டியுள்ள நீர்நிலைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்னும் ஓரறி நாட்களில் வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள மற்ற நீர் நிலைகளும் தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai lakes filled 100% by the northeast monsoon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->