சென்னை : நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபரை கோட்டை விட்ட போலீசார்!  - Seithipunal
Seithipunal



சென்னை மதுரவாயில் அருகே இரண்டு நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கி, பின் போலீசாரின் பிடியிருந்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

இன்று மதியம், சென்னை மதுரவாயில் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். முன்னுக்கு பின்னாக அந்த நபர் பதிலளித்ததால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் பிடித்து வைத்தனர்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் தப்பி ஓடி விட்டார். அதே சமயத்தில் அந்த மர்ம நபர் எடுத்து வந்த பையை சோதனை செய்ததில், அந்த பையில் இரண்டு நாட்டு வெடி குண்டுகள், ஒரு கத்தியும் இருந்தது.

உடனடியாக நாட்டு வெடிகுண்டுவை செயலிழக்கும் நிபுணரை வரவழைத்து, நாட்டு வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

மேலும், எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்த நபர் யார்? ஏதேனும் கொலை செய்ய திட்டமா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடி அந்த நபரை தேடி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Maduravayal police some incident 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->