கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் பரபரப்பு வாக்குமூலம்! அதிர்ச்சியடைந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


நம்பிக்கையுடன் வழிபட்ட கடவுள் தன்னை கைவிட்டதால் மது அருந்திவிட்டு கோவிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை, கொத்தவாசல் சாவடி பகுதியில் வீரபத்திர ஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 38) என்பவர் மது போதையில் இந்த கோவிலில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார்.

அப்போது இந்த கோவிலின் உள்ளே பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித உயிர் செய்தமும் இன்றி தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முரளி கிருஷ்ணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

இதனை அடுத்து போலீசார் விசாரணையில் முரளி கிருஷ்ணன், கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோவிலில் வழிபட்டு வருவதாகவும் ஆனால் கடவுள் தனக்கு திருப்பி எதுவும் செய்யவில்லை என்பதால் ஆத்திரமடைந்து மது அருந்திவிட்டு கோவிலின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai man threw petrol bomb inside temple 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->