பாமக உள்ளிட்ட கட்சிகளின் கடும் கண்டனத்தால் பின்வாங்கியது சென்னை மாநகராட்சி! மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்பு!
Chennai Mayor Announce Foodball Paly Ground free
சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்றும், இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல திமுகவின் கூட்டணி கட்சியான கம்னியூஸ் காட்சிகள் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், விளையாட்டுத் திடல்களை கட்டணம் இன்றி தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட 9 கால்பந்து செயற்கை புல்வெளி விளையாட்டுத் திடல்களை கட்டணம் இன்றி அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விளையாட்டு திடல்களின் பராமரிப்பு செலவை சென்னை மாநகராட்சி ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர், மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விளையாட்டு திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்க மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
English Summary
Chennai Mayor Announce Foodball Paly Ground free