சென்னை | தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை! வெளியான அதிர்ச்சி காரணம்?!
chennai Medical College Student suicide
சென்னை மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாங்காட்டுப்பகுதிகள் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியின் டீன், மகள் ஷைலா (வயது 21) அதே கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், திடீரென்று மாணவி ஷைலா ததனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து காரணம் என்ன? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே வெளியான தகவலின்படி, மாணவி ஷைலாவிற்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லை என்றும், கட்டாயப்படுத்தி மருத்துவ படிப்பு படித்து வைத்ததால், மன உளைச்சலில் மாணவி இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மாணவியின் தற்கொலைக்கு அதிகாரபூர்வமாக காரணம் எதுவும் போலீசார் விசாரணையில் வெளிவரவில்லை. காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியின் டீன் மகளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai Medical College Student suicide