பொன்முடி வீட்டில் பரபரப்பு! அமலாக்கத்துறையால் விரட்டியடிக்கப்பட்ட நபர் பரபரப்பு பேட்டி!
Chennai Minister Ponmudi House ED Raid Some Incident
திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கவுதம் சிகாமணி வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அமைச்சர் பொன்முடி வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் போது, திமுக தொண்டர் ஒருவர் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கி, செல்போன் பறிக்கப்பட்டு, பின்னர் அமைச்சரின் இல்லத்தில் இருந்து விரட்டி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளிடமிருந்து சிக்கி பின்னர் விரட்டியடிக்கப்பட்ட அந்த திமுக தொண்டர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "இன்று காலை 8 மணி அளவில் அமைச்சரிடம் மனு கொடுக்க நான் வந்தேன். நான் வேறு எந்த காரணத்திற்காகவும் வரவில்லை.
அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை உள்ளே அழைத்துச் சென்று, என்னுடைய செல்போனை பிடுங்கிக் கொண்டார்கள். நான் ஒரு இதய நோயாளி, வெளியே செல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் வெளியே விடவில்லை.
வெளியில் இருந்து எனக்கு டீ கொடுத்தார்கள். அதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. சரி என்று நான் அமர்ந்திருந்தேன். பின்னர் அவர்களே இரண்டு மணி நேரம் கழித்து என்னை என்னிடம் செல்போனை கொடுத்து வெளியே போக சொன்னார்கள்.
அப்போது நான் போக முடியாது. எங்களுடைய தளபதி எங்களை அப்படி வளர்க்கவில்லை. நான் இங்கே இருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக என்னிடம் போனை கொடுத்து வெளியே விரட்டி அனுப்பினார்கள்.
உள்ளே ஐந்தாவது அதிகாரிகள் உள்ளனர். அமைச்சர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் என்னிடம் விசாரணை செய்தபோது, எதற்காக நீங்கள் வந்தீர்கள்? ஏதேனும் எடுத்து வந்து உள்ளீர்களா? என்று கேட்டார்கள்.
நான் எதுவும் இல்லை. என்னிடம் என்ன இருக்கிறது என்று பதில் சொல்லிவிட்டு, இங்கிருந்து நீங்கள் எதையும் எடுத்துப் போக ஒன்றும் இல்லை என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு வந்தேன்" என்றார் அந்த திமுக தொண்டர்.
English Summary
Chennai Minister Ponmudi House ED Raid Some Incident