சென்னைக்கு பிங்க் ஆட்டோ திட்டம்! 200 பெண்கள், தலா ரூ.1 லட்சம் மானியம் - தமிழக அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை நேர நிகழ்வுகள் தொடங்கி உள்ளது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை உள்ளிட்ட துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கு துறை அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் கீதாஜீவன் வெளியிடப்பட்டு வருகிறார்.

அதில், சென்னையில் 200 பெண்களை தேர்வு செய்து, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கி, பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

திருவள்ளூர், திருப்பூர், தூத்துக்குடி, கோவை, புதுக்கோட்டை, மதுரையில் ஒரு கோடியில் மகளிர் விடுதி சீரமைக்கப்பட உள்ளது. 

ஒரு கோடி ரூபாயில் ஆறு அரசு சேவை இல்லங்கள், 27 குழந்தை காப்பகம், மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தமிழக அரசு அளிக்க உள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

2023-ல் தமிழ்நாட்டில் 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai PInk Auto TNGovt Announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->