சென்னை: ஒரு போலீஸ் செய்யுற வேலையா இது! 6 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு!
Chennai Police Arrest for Forgery case
சென்னை வடபழனியில் உள்ள சொகுசு ஹோட்டலில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தன்னை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு காவலர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதை எடுத்து வடபழனி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, வடபழனியில் உள்ள 100 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மே 31-ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர், தன்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் அதிகாரி எனக் கூறி இந்த ஓட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் வந்துள்ளதாக சோதனை செய்துள்ளார்.
அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஹோட்டல் மேலாளர், இது குறித்து வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார்.
இது குறித்து, வடபழனி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அந்த நபர் திருச்சியை சேர்ந்த பவிஷா என்றும் அவர் திருவான்மியூரில் தங்கி, சென்னை ஆயுதப்படை காவலராகப் பணிசெய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருவான்மியூரில் உள்ள ஸ்பாவில் எத்தனை காவல் துணை ஆணையரின் தனிப்படை காவலர் எனக் கூறி அவர்களிடம் ரூபாய் 5000 பெற்று காவல்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் காவல் துறையினர் அவர் மீது இந்த மாதம் 14-ம் தேதி 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேற்கொண்டு அவர் திருச்சியில் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறையினர் நேற்று அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
English Summary
Chennai Police Arrest for Forgery case