"குடி" மகன்களின் கவனத்திற்கு... இனி சொத்து பறிமுதல் தான்.. காவல்துறை எச்சரிக்கை..!!
Chennai police warns property of nonpaying fines will be confiscated
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் அபராதம் செலுத்தாத 3,376 பேரிடமிருந்து கடந்த ஒரு மாதத்தில் ரூ.3.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
புதிய போக்குவரத்து விதிகளின்படி குடித்துவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டிய நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்வதோடு ரூ.10,000 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
குடிபோதையில் சிக்கும் வாகன ஓட்டைகள் போலீசாரிடம் நீதிமன்றத்தில் அபராத தொகை கட்டுவதாக கூறிவிட்டு வழக்கு பதிவுக்கான ரசிகர்களை மட்டும் பெற்று செல்கின்றனர். ஆனால் முறைப்படி நீதிமன்றத்தில் அபராத தொகை செலுத்துவதில்லை.
அந்த வகையில் சென்னை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபோலையில் வாகனம் ஓட்டிய 7,667 நபர்கள் தங்கள் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூலிக்க சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி 10 போக்குவரத்து கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால் சென்டர்கள் மூலம் சென்னை மாநகர் காவல் எல்லையில் கடந்த ஒரு மாதத்தில் 3376 நபர்களுக்கு நினைவூட்டி அபராதமாக 3 கோடியே 49 லட்சம் ரூபாய் சென்னை போக்குவரத்து காவல்துறையின் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் அபராத தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ள நபர்களின் சொத்துக்களை நீதிமன்றம் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Chennai police warns property of nonpaying fines will be confiscated