சென்னை வாசிகளே உஷார்! சம்பவம் இருக்கு - தமிழ்நாடு வெதர்மேன்!
Chennai Rain alert Tamilnadu weatherman alert july
இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளரான பிரதிப் ஜான், சமூக வலைத்தளம் மூலம் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் சமூக வலைத்தள பதிவில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வறண்ட வானிலேயே நிலவக்கூடும், இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பே இல்லை.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். ஹாசன், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அவலாஞ்சி மற்றும் மேல்பவானி பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு உண்டான வாய்ப்பு உள்ளது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரதம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai Rain alert Tamilnadu weatherman alert july