சென்னையில் லேசான மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலு பெற்று நாளை நள்ளிரவில் மேற்கு வங்காளம் - சாகர் தீவிற்கு இடையே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை நகரின ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை லேசான மழை பெய்தது. 

எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகள் லேசான மழை பெய்தது. 

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் இன்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rain update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->