#சென்னை | தனியார் ரிசார்ட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே தனியார் நட்சித்திர விடுதியின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் தனியார் நட்சித்திர விடுதியில் பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த 8 வயது சிறுமி, விடுதியின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை அடுத்த மாமல்லபுரம்-கோவளம் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில்,  செங்கல்பட்டு பாரதிதாசன் காலனி பகுதியைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் இன்று வந்துள்ளனர்.

காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட இவர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. மாலை 6 மணி அளவில் மூன்று குடும்பத்தினரும் ரிசார்ட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து உள்ளனர்.

அப்போது, அவர்களின் ஒரு 8 வயது சிறுமி, நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும்போது, கால் இடறி நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார். 

இதனை யாரும் கவனிக்காத நிலையில், சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Resort years old girl death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->