சென்னை திரும்புவோருக்கு புது ரூட்.. கிளாம்பாக்கம் போக தேவையில்லை.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.

பொங்கல் விடுமுறை முடிந்து நாளை முதல் மக்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள். இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாக நேரிடும்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் கிளாம்பாக்கத்தில் இருந்து எளிதாக பயணம் மேற்கொள்ள ரயில் சேவையை பயன்படுத்தலாம் என்றால் அங்கு இன்னும் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை. 

கிளாம்பாக்கத்திற்கு அருகே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. ஆனால் பெத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலைக்கு ஒட்டி உள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் பெத்தேரி ரயில் நிலையத்தில் அருகே இறங்கி அங்கிருந்து புறநகர் ரயிலில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்து ஓட்டுனர்களும் ரயிலில் பயணம் செய்ய விரும்புவரை பெத்தேரி ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டால் பொதுமக்களும் சிரமமின்றி தங்கள் இல்லங்களுக்கு திரும்புவார்கள். பயணிகளும் ரயில் பயணத்தை மேற்கொண்டால் சாலை போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai return people can easily travel in electric train


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->