சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரௌடிகள் சிலரையும் போலீசார் வலை வீசி தேடுகின்றனர்.

அந்த வகையில் நேற்று டெல்லியில் தலைநகர் டெல்லியில் பதுங்கி இருந்த ரவுடி அப்புவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த பதினெட்டாம் தேதி வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரின் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும் சென்னையின் பிரபல ரவுடியுமான ஏ ப்ளஸ் குற்றவாளி சிடி மணியை சேலத்தில் வைத்து நேற்று நள்ளிரவு துப்பாக்கி முனையில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்று அஞ்சிய சிடி மணி சென்னையில் இருந்து தப்பி சேலத்தில் பதுங்கி இருந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் போலீசார் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தேடப்படக்கூடிய மற்றொரு ரவுடியான சம்போ செந்திலுக்கும் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சிடி மணி ஆகியோருக்கும் இடையே முன்பாக இருந்து வந்துள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் காரில் சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி சம்போ செந்தில் குரூப்ஸ் வீசி, சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜியை கொலை செய்ய முயன்றனர். 

அந்த சம்பவத்தில் இரண்டு பேரும் தப்பிய நிலையில் அதில் ஒருவர் போலீசாரின் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தற்போது துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதே சமயத்தில் இதுவரை சம்பா செந்தில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து வெளிநாடு தப்பி சென்றுள்ளதாகவும் அவரை பிடிக்க போலீசார் கடந்த மூன்று மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rowdy CD mani gun point arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->