சென்னை மக்களுக்கு ஒரு நல்லசெய்தி! ஒரு கெட்ட செய்தி!
Chennai Tambaram electric train work finish
தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இன்றுவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சீரமைப்பு பணி காரணமாக காலை பத்து முப்பது மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருந்தது.
இதே போல் இரவு நேரத்தில் இரவு 10 மணி முதல் 11 59 வரை ரயில் சேவை பல்லாவரம் வரை மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தது.
மேலும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி மட்டுமே மேல் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வந்தன.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள் என பலரும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அதே சமயத்தில் மாநகர போக்குவரத்து சார்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறிப்பாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்தில் பேருந்துகளும் என மொத்தம் எழுவது பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள் கட்டும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து, மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும் என்றும், அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட உள்ளது.
நாளை தான் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே முடிந்ததால் இன்றே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது..
இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் விமான நிலையம் வரையிலான பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை தொடுநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
விம்கோ நகர் - சென்னை விமான நிலையம், பரங்கிமலை - சென்டர் ரயில் நிலையம் வழித்தடங்களில் வழக்கம் போல ரயில்கள் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
English Summary
Chennai Tambaram electric train work finish