சென்னை: சட்டத்தை மீறி செயல்பட்ட 5 கவுன்சிலர்கள் நீக்கம்!
Chennai Thambaram Councillor Dismissed
நமது மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998 ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
வ.பாபு
189-வது வார்டு உறுப்பினர்
பெருநகர சென்னை மாநகராட்சி
கே.பி. சொக்கலிங்கம்
5-வது வார்டு உறுப்பினர்
பெருநகர சென்னை மாநகராட்சி
ச. ஜெயபிரதீப்
40-வது வார்டு உறுப்பினர்
3-வது மண்டலக்குழுத் தலைவர், தாம்பரம் மாநகராட்சி
க. சகுந்தலா
11-வது வார்டு உறுப்பினர்
உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர்
English Summary
Chennai Thambaram Councillor Dismissed