சென்னை அருகே தீ மிதிக்கும்போது தீக்குழிக்குள் தவறி விழுந்த பெண்  - Seithipunal
Seithipunal


சென்னை, வியாசர்பாடி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்த பெண் காயம் அடைந்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் ஸ்ரீதீப்பாஞ்சம்மன் கோயில் இருக்கிறது. மிகப் பிரபலமான இந்த கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தீமிதி திருவிழாவில் வியாசர்பாடி மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தீ மிதிக்கும் போது ஒரு பெண் கால் தவறி தீக்குளிக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு படையினர் அந்தப் பெண்ணை மீட்னர். இதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தீக்காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Viyasarpadi Temple Festival Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->