சென்னை வானிலை மையம் விடுத்த பேரதிர்ச்சி எச்சரிக்கை.! மக்களே கவனமாக இருங்கள்.!!
Chennai weather report announcement for coming four days
தமிழகத்தில் இந்த வருடம் பொழிய வேண்டிய மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டு சென்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவு மழை கண்டிப்பாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்., அனைத்தும் கானல் நீராய் போனது.
இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கும் முன்னதாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயில் மக்களை வாட்டி வதைக்க துவங்கியது. கடந்த 3 வாரங்களுக்கு வெயில் தனது உக்கிரத்தை காட்ட துவங்கிய நிலையில்., தமிழகத்தில் வெப்பமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில நேரங்களில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதியடைந்து சிரமப்படும் வேளையில்., வரும் நான்கு நாட்களுக்கு கடுமையான வெயில் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்திற்கு கிழக்கு திசையில் இருந்து காற்றானது வீசும் சமயத்தில் வெப்பத்தின் தாக்கமானது இருக்காது., ஆனால் தற்போது தெற்கு திசையில் இருந்து காற்றானது வீசுவதால்., அந்த காற்றானது நிலப்பரப்பிற்கு வருகை தராததால் பெரும்பான்மை மாவட்டங்களில் வெப்பமானது அதிகளவில் இருக்கும்.
வரும் நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஸியஸ் திகளவில் இருக்கும் என்பதால்., இந்த நிகழ்விற்கு பின்னர் ஏற்படும் காலநிலை மாற்றத்தை பொருத்தே வெப்பத்தின் தாக்கமானது மேலும் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்ற நிகழ்வு தெரிய வரும் என்று தெரிவித்தார்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு முடிந்தளவு இயற்கையான பழச்சாறுகளை அருந்துங்கள்., தலைக்கு எண்ணையை தேய்த்து வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு முடிந்தளவு உங்களை காத்துக்கொள்ளுங்கள்.
English Summary
Chennai weather report announcement for coming four days