சென்னையில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி! 5 மாதம் கழித்து வெளியான அதிரவைக்கும் உண்மை! - Seithipunal
Seithipunal


சென்னையில் கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, உடல்நிலை குறைவால் தான் இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கவுஷ்பாஷா. 48 வயதான துப்புரவு பணியாளரான இவருக்கு, மனைவி சாஜிதா பானு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கவுஷ்பாஷா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதனை எடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கவுஷ்பாஷா மரணம் குறித்து அவரின் மனைவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவருக்கு ஏற்கனவே பல உடல் நல பாதிப்பு இருந்ததாகவும், இதனால் அவர் இறந்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசாருக்கு அவரின் பதிலில் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், கவுஷ்பாஷாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே கவுஷ்பாஷா பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து இறுக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, கவுஷ்பாஷாவின் மனைவி சாஜிதா பானுவிடம் போலீசார் சிறப்பு விசாரணையை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், கவுஷ்பாஷாவை துப்பட்டாவால் கழுத்தை இறக்கி கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் சாஜிதா பானு ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், தனக்கு இடையூறாக இருந்த கணவனை சம்பவத்தன்று ஆத்திரத்தில் சாஜிதா பானு சரமாரியாக தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சாஜிதா பானு பாலியல் வழக்கில் சிக்கி, சிறைக்கு சென்று வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Wife Killed Husband 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->