மோடி குறித்து அவதூறு பேச்சு.. சென்னை யூடியூபரை தமிழக காவல்துறை உதவியுடன் தூக்கி சென்றது உ.பி காவல்துறை..! - Seithipunal
Seithipunal


மாதவரத்தில் இருந்து கொண்டு உத்தரபிரதேச அரசு தொடர்பாகவும், பிரதமர் மோடி தொடர்பாகவும் யூடியூபில் அவதூறு வீடியோ பதிவிட்ட ஆசாமியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்னைக்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். 

சென்னையில் உள்ள மாதவரம் கே.பி.ஆர் நகரில் வசித்து வருபவர் மன்மோகன் மிஸ்ரா. இவர் தன்னைத் தானே குருஜி என்று அழைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இவர் மன்னடி தம்புச்செட்டி தெருவில் பாரத சுவாமி மகான் சுதேசி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இவருக்கு சொந்தமாக உத்திர பிரதேசம் மாநிலத்தில் மடம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது அங்கு சென்று வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மன்மோகன் மிஸ்ரா கொரோனா கடந்த காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக பாரதப் பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச அரசு தொடர்பாக அவரது கருத்துகளை பேசி யூடியூபில் பதிவு செய்துள்ளார். 

இதனை ஹிந்தி மொழியில் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை கண்ட உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள், இவரது பேச்சு சர்ச்சையாக இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தை சார்ந்த பாஜக பிரமுகர் வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உ.பி காவல் துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் சென்னைக்கு விரைந்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அவர் சென்னை காவல் துறையினர் உதவி செய்வதாக கூறியதையடுத்து, மாதவரம் காவல்துறையினர் உதவியுடன் மன்மோகனின் வீட்டிற்கு சென்ற உத்தரப்பிரதேசம் காவல்துறையினர், குருஜியை அலேக்காக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர். மாதவரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை உத்தரப்பிரதேசம் அழைத்துச் செல்லவும் அனுமதி பெற்றனர். 

இது தொடர்பாக தமிழக காவல்துறையினர் தெரிவிக்கையில், " யூடியூபில் வீடியோ பதிவு செய்பவர்கள் சட்டத்தை மீறி எந்த வீடியோவும் பதிவிட கூடாது. சட்டத்தை மீறி அரசியல் கட்சி தலைவர்கள், ஆட்சி தலைவர்கள் போன்றோரை விமர்சித்து வெளியிடப்படும் வீடியோ குறித்து, இந்தியாவில் உள்ள எந்த ஊரில் புகார் அளித்தாலும், உங்களை உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்வார்கள் " என்றும் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai You tuber Manmohan Mishra Arrested by UP Police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->