"நீங்க என்ன சாதி"..? அம்மா உணவகம் வருவோரிடம் "சென்னை மாநகராட்சி" எடுக்கும் சமூக நீதி சர்வே..!! - Seithipunal
Seithipunal


அம்மா உணவகத்தில் சாப்பிட வருபவர்களிடம் "நீங்க எந்த சாதி?" என்பது உள்ளிட்ட 21 கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை மாநகராட்சி ஆய்வு..!!

சென்னை மாநகராட்சியில் முதன்முதலில் கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 207 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டது. அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லி ரூ.1க்கும், பொங்கல் ரூ.5க்கும், மதியம் வேளையில் சாம்பார் சாதம், கலவை சாதம் ரூ.5க்கும், தயிர் சாதம் ரூ.3க்கும், இரவு வேளையில் 2 சப்பாத்தி ரூ.3க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது

இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவங்களை நம்பி இருந்து வருகின்றனர். மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. 

சென்னையில் அம்மா உணவகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே வந்தது. அம்மா உணவகத்தை நடத்த ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவு ஆகும் நிலையில் ரூ.20 கோடி மட்டுமே வருவாயாக அரசுக்கு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்கள் மூலம் தற்பொழுது வரை ரூ.786 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வருவாய் குறைவாக உள்ள அம்மா உணவகங்ளை மூடவேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் பரிந்துரை செய்தார்.

இதன் காரணமாக அம்மா உணவகத்தை யார் பயன்படுத்துகின்றனர் என்பதை கண்டறிய மாநகராட்சி சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவத்துக்கு சாப்பிட்ட வருபவர்களின் பெயர், சாதி, எந்த வேலை செய்பவர், தமிழகத்தை சார்ந்தவரா, வெளி மாநிலங்களை சார்ந்தவரா, எப்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துகின்றனர், எத்தனை வேளை உணவு அருந்துகின்றனர் உள்ளிட்ட 21 கேள்வி அடங்கிய ஆய்வை கடந்த 5 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் நோக்கம் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் தயாரிக்கப்படும் இட்லி, சப்பாத்தி ஆகியவை, தெருவோர கடை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவதாக வரும் புகார்களை உறுதிப்படுத்தவும்,

உரிய பயனாளிகளுக்கு உணவுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்கு இந்த ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

அம்மா உணவகம் என்பது ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் சேவை நோக்கத்தோடு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்ட நிலையில் லாப நோக்கத்தை கணக்கிட்டு மூடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆய்வு என்ற பெயரில் அம்மா உணவகங்களில் பசியாற உணவு உண்பவர்களின் சாதியை குறிப்பிட்டு கேட்க நோக்கம் என்ன.? சாதி அடிப்படையில் சர்வே எடுத்து அவர்களை கொச்சைப்படுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சமநீதியை பற்றி பெருமையாக பேசும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இதுதானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiCorp conducts caste based survey at Amma unavagam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->