தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மீது வழக்கு பதிவு! அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்!
ChennaiHC Case filed against Tamil Nadu DGP Sylendrababu
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரை தாக்கிய தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உட்பட நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மாரியங்குலத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாகரத்தினம் தாக்கல் செய்த மனுவில் மனித உரிமை தொடர்பான வழக்குகள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்களுக்கான வழக்குகளை நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு வந்த போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாகவும் காவல் நிலையங்களில் வைத்து நிர்வாணம் படுத்தி கடுமையாக தாக்கியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் பனைக்குடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது ராஜரத்தினம் இறந்து விட்டதால் அவருடைய மனைவி சரோஜா நடத்தி வந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜான வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
மனுதாரர் தரப்பில் கைது நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிய வேண்டும் என வாதிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு தொடரப்பட்ட ஐந்து ஆண்டுகளாகியும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் கிடைக்கவில்லை. எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வழக்கறிஞர் நாகரத்தினத்தை பிடித்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகாரத்தின் படி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக பணிபுரிந்த அருண் சக்தி குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து எடுப்பதாகவும். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டவருக்கு சம்மன் அனுப்புமாறு உத்தரவிடுவதாகவும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
ChennaiHC Case filed against Tamil Nadu DGP Sylendrababu