#BREAKING: சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை.. தேர்வுகள் ஒத்துவைப்பு.! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக இன்று (நவம்பர் 11ம் தேதி) சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று  திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போன்று  15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக 28 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Annamalai University Holiday due to heavy rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->