சிதம்பரம் | அரசுப்பேருந்து மோதி இளைஞர்கள் பரிதாப பலி! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே உள்ள குத்தா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரிவலம் (வயது 21) மற்றும் கலையரசன் (வயது 21) இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தின கூலியாக பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில் பரங்கிப்பேட்டைக்கு சென்று விட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து இளைஞர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிரிவலம் மற்றும் கலையரசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

தொடர்ந்து 3 மணி நேரம் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பிறகு இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram government bus collision accident youths killed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->