'கருணை கொலை செய்யுங்கள்'! டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலர்!  - Seithipunal
Seithipunal


சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமை காவலர் தன்னையும் தனது மகளையும் கருணை கொலைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். 

தலைமை காவலர் கோதண்டபாணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் சிறுநீரக பிரச்சனைக்காக எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் பின் விளைவால் காலில் பாதிப்பு ஏற்பட்டு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் இருந்து உரிய சிகிச்சைகள் அளிப்பதாக தெரிவித்து சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தனது மகளுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர் தர்மாவில் ஈடுபட்டார். 

இது குறித்து தலைமை காவலர் கோதண்டபாணி தெரிவிக்கையில், ''எனது மகள் பிரதிக்‌ஷாவுக்கு எலும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் எனது மகளுக்கு ஊனமுற்றோருக்கான சான்றிதழ் மற்றும் உதவி தொகை வாங்கி தருவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக போராடுகிறேன். ஆனால், உரிய நியாயம் கிடைக்கவில்லை. இதனால் எனது மகளையும் என்னையும் கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுங்கள் என குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கிறேன்'' என்றார். 

இதனை அடுத்து போலீஸார் சமாதானம் செய்து அவரையும் அவரது மகளையும் அனுப்பி வைத்தனர். தலைமைக் காவலரின் போராட்டத்தால் டி.ஜி.பி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Constable involved front  DGP office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->