பணியின்போது விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் - நிவாரணம் அறிவித்த முதல்வர்! - Seithipunal
Seithipunal


முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தாருக்கும் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 'திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து தலைமை காவலராக ஸ்ரீதர் (வயது 45) என்பவர் பணியாற்றினார். 

இவர் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றார் ஒரு கார் ஸ்ரீதர் மீது மோதியதால் படுகாயம் அடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வந்த நிலையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த விட்டார்.

இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். தலைமை காவலர் ஸ்ரீதர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். 

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் அவரது குடும்பத்தின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief constable on duty accident died 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->