முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமின்!
Chief Minister Defamation Ex minister Anticipatory bail
தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி உள்பட முதலமைச்சர் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் இழிவாக பேசியதாக தெரிகிறது.
இது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கபடும் என நினைத்து சி.த செல்லபாண்டியன் முன்ஜாமின் கேட்டு சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வேன் என்றும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி 15 நாட்கள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து அமைச்சர் சி.த செல்லபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
English Summary
Chief Minister Defamation Ex minister Anticipatory bail