முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு: பொள்ளாச்சி அ.தி.மு.க பிரமுகர் சிறையில் அடைப்பு!
chief minister defamation Pollachi admk leader jailed
கோயம்புத்தூர், பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் 18 வது தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க செயலாளராக உள்ளார்.
இவர் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க பிரமுகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டதை அறிந்த பொள்ளாச்சி எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.கவினர் ஏராளமானோர் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.மு.கவினர், அருண்குமாரை விடுவிக்கும் வரை காவல் நிலையத்தை விட்டு செல்ல மாட்டோம் என தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அ.தி.மு.கவினர் கலைந்து சென்றனர். பின்னர் அதிமுக பிரமுகர் அருண்குமார் பொள்ளாச்சி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் அ.தி.மு.க பிரமுகர் அருண்குமாரை பொள்ளாச்சி போலீசார் சிறையில் அடைத்தனர். இது குறித்து பொள்ளாச்சி எம்.எல்.ஏ தெரிவித்திருப்பதாவது, 'கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகரான அருண்குமார் பொள்ளாச்சி 18 வது தகவல் தொழில்நுட்ப செயலாளர் உள்ளார்.
இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை மறு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்குப் பதியாமல் அ.தி.மு.க பிரமுகர் அருண்குமார் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது' என்றார்.
English Summary
chief minister defamation Pollachi admk leader jailed