பத்ம விருதுகள் 2025 - தமிழகத்தின் பிரபல பறை இசை கலைஞருக்கு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருது இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 

இந்த விருது பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் படி மொத்தம் 12 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு இசை கலைஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 50 ஆண்டுக்கும் மேலாக அனுபவம் கொண்ட புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu parai music artist velu selected padma award 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->