இந்த அங்கீகாரம், பெரும் பாக்கியம்; மத்திய அரசுக்கு நன்றி; அஜித்குமார் நெகிழ்ச்சி பதிவு..!
Ajith Kumar thanked the Central Government
மத்திய அரசு எனக்கு விருது அறிவித்துள்ளதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். பத்ம பூஷன் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு அங்கீகாரத்தை இந்திய அரசு எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் என நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்னை உருவாக்கிய திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுக்களூக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. என்னுடைய ரசிகர்கள் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது.
அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அஜித்குமார் அந்த கடிதத்தில் நன்றி கூறியுள்ளார்.
English Summary
Ajith Kumar thanked the Central Government