பட்டாசு வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு.!!
chief minister mk stalin compensation announce to firecrackers blast died peoples
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. சுமார் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில், கோட்டமேடு பகுதியை சேர்ந்த மூன்று பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கிக்கொண்டு கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்தனர்.

இந்த நிலையில், கஞ்சநாயக்கன்பட்டியில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்ததால், மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து ஓடினர்.
இந்த விபத்தில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் செல்வராஜ் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin compensation announce to firecrackers blast died peoples