தமிழை தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழில் முதன்முறையாக சென்னை அருகே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ENTகூட்டமைப்பின் சார்பில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டை மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு தடக்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:- "தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. 

முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்திருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருப்பார். மருத்துவ நூல்களும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும், எதிலும் கிடைப்பதில்லை.

நிர்வாகத்தில், கோயில்களில், நீதிமன்றத்தில் என்று அனைத்து இடங்களிலும் தமிழ் என்பதை வலியுறுத்தும் மற்றும் செயல்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin speach in medical science cnference in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->