முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம்! காரணம் என்ன?
Chief Minister MK Stalin trip abroad
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா அதன் தொடர்ச்சியாக அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வருகை தந்து முதலீடுகளை மேற்கொண்டார்கள்.
சுமார் ரூ. 64 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 26 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் வருகின்ற 28ஆம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா அதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் 15 நாட்கள் இந்த பயணம் அமைய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Chief Minister MK Stalin trip abroad