சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரார்களில் ஒருவர் ஜூடோ ரத்னம். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவர் நேற்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலக வட்டாரங்கள், அரசியல் வட்டாரங்கள் என்று அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

"தமிழ் சினிமாவின் பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற இவர், போக்கிரி ராஜா மற்றும் தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். 

இவர் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டவர்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்ற இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 

கலையுலகிலும், அரசியல் உலகிலும் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள இவரின் மறைவால் தவிக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக மற்றும் அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister stalin condoles to fight master judo rathnam death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->