காவல்துறையிரை எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே ஸ்டாலின் பயன்படுத்திகிறார் - அண்ணாமலை காட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உருவாகி உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த மூதாட்டிகளை குறி வைத்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.  

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று  மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று 70 வயதான முத்துலட்சுமி என்ற மூதாட்டியும் கொலை செய்யப்பட்டு இருப்பது தமிழகம் மக்களிடையே பாதுகாப்பு குறித்து பலத்த கேள்வியை எழுப்புகிறது.

கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே தமிழகத்தில் இல்லை என்ற அளவுக்கு, தமிழக முழுவதும் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு இருக்கிறது.

காவல்துறையினரை எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்திவருகிறார்.  சட்ட ஒழுங்கை காப்பாற்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin is only using the police to take revenge on the opposition by Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->